
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் – பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் சூளுரை
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் பிரபல பண்டாரவிளை வைத்தியர் சிவசாமி வேலுமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் கனிமொழி எம்.பி. மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி கட்சியான தமாக சார்பில் எஸ்.டி.ஆர்.
விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ரொவினா ரூத் களமிறக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டியாக அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற பரபரப்பும், அதே நேரத்தில் முதல்வரின் தங்கை போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்து பெற்று திகழ்கிறது
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் என்.ஆர்.தனபாலன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடன் நட்புடன் செயல்பட்டு வருவதாலும், அதிமுக கட்சியுடன் நீண்ட காலம் கூட்டணியில் இடம்பெற்று வருவதாலும் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக என்.ஆர்.தனபாலன் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆணைக்கிணங்க,
பெருந்தலைவர் மக்கள் கட்சி
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில், மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் ரவிசேகர் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மண்ணின் மைந்தன் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் இதில் இளைஞர்கள், மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு வாக்கு கேட்டு தின்னை பிரச்சாரம் செய்வது என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் போது பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் திரளாக நமது இளைஞரணி, மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாபெரும் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் இருதய குமார் நாடார் பேரவை மாவட்டத் தலைவர் எம் எஸ் டி ரவிசேகர் மாவட்டத் துணைச் செயலாளர் ரஞ்சித் தமிழ்நாடு நாடார் பேரவை துணைத் தலைவர் சண்முகவேல் நாடார் மற்றும் ஹரி பிரபாகரன் மணி மதன் சக்திநாராயணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள்
கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து, நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து சந்தித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.மாரியப்பன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.
சண்முகநாதனை சந்தித்து கூட்டணி கட்சி என்ற முறையில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவையினர் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிடும் வகையில், களப்பணியாற்றி வந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து தீர்வும் கண்டு வருகிறார்கள். இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியுடன் திகழ்ந்து வருகிறது.
சமுதாய ரீதியாக தென் மாவட்டங்களில் மிக செல்வாக்கு பெற்றுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுகவின் கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளதாக தெரிய வருகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி மற்றும் கட்சி தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளதால் தேர்தல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ளது..