தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொழிலதிபர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொழிலதிபர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி களமிறங்கியுள்ள நிலையில் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து வரும் நிலையில், தொழிற்சங்க தலைவர் கதிர்வேல், அகில இந்திய வர்த்தக தொழில் சங்க தலைவர் ஜோ பிரகாஷ், இந்திய வியாபார தொழிற்சங்க தலைவர் கோடீஸ்வரன், தொழிலதிபர்கள் ராஜ்குமார், டி.ஏ.தெய்வநாயகம், பி.எஸ்.டி.எஸ்.வேல்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேட்பாளர் சிவசாமி வேலுமணி கேட்டுக்கொண்டார்.

இதில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இரா.ஹென்றி, அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புசாரா அணி செயலாளர் சுதாகர், மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )