தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்

தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இ.கம்யூ மாவட்ட செயலாளர் கரும்பன், வி.சி.க. மாவட்ட செயலாளர் கணேசன், இ.யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசுகையில்: இந்தியா கூட்டணி சார்பில் தமிழக முதலமைச்சர் என்னை வேட்பாளராக அறிவித்து உங்களிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து எனக்கு இரண்டாவது முறை பணியாற்ற அனைவரும் ஆதரவு தந்து உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தங்களது வருகைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலெட்சுமி சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனர், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, கனகராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குபேர்இளம்பரிதி, சீனிவாசன், கவிதாதேவி, அசோக், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், பாக்கியதுரை, சின்னத்துரை, பிரபு, அந்தோணி கண்ணன், ராமர், நாகராஜன், பார்வதி, நிக்கோலாஸ் மணி, ஜேசையா, ஜோசப் அமல்ராஜ், பிரதீப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ரூபஸ் அமிர்தராஜ், ஜெயக்கனி, சாகுல் அமீது, பரமசிவம், டேனி, துணை அமைப்பாளர்கள் ரவி, ஆர்தர்மச்சாது, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், சங்கரநாராயணன், பால்ராஜ், தங்கராஜ் சீதாராமன், முத்துராமன், குமரன், ரூபராஜா, செல்வின், சீதாலட்சுமி, வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொமுச நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சேர்மபாண்டியன், மாரிச்சாமி, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சரவணக்குமார், சின்னபாண்டியன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, நாகேஸ்வரி, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், பவாணி, வைதேகி, ஜாக்குலின்ஜெயா, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், முத்துராஜா, லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், சுரேஷ், ரவிச்சந்திரன், முனியசாமி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், ராஜாமணி, அண்டோ, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், செய்து காசிம், சிவசுந்தர், சத்யா, மற்றும் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, சமத்துவ மக்கள் கழகம் தொகுதி பொறுப்பாளர் உதயசூரியன், மக்கள்நிதிமய்யம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஆதிதமிழர் பேரவை தொகுதி பொறுப்பாளர் சீதாலட்சுமி, ஆதிதமிழர்கட்சி தொகுதி பொறுப்பாளர் அன்பரசு, தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர் வேல்முருகன், மற்றும் மதிமுக நிர்வாகிகள் நக்கீரன், சரவணப்பெருமாள், மகாராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் அருள், கோபால், ராகுல், சேகர், நிர்மல்கிறிஸ்டோபர், விஜயராஜ், ஜெயராஜ், மைதீன், சிபிஎம் ராஜா, சிபிஐ மாடசாமி, மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ் உள்பட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான லெட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )