
நான் ஏழை குடும்பத்தை சோ்ந்தவன், தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவன் அதனால் மக்களின் தேவையை அறிந்து அதற்கான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன்- கழுகுமலை, கயத்தாறு ஓன்றியங்களில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகாிப்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதாித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ கழுகுமலை, கயத்தாறு ஓன்றியங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.
முன்னதாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி பேசுகையில், நான் வெற்றி பெற்றால் கழுகுமலை பேரூராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் நான் ஏழை குடும்பத்தை சோ்ந்தவன் என்பதால் இங்குள்ள மானாவாாி விவசாயிகள், தீப்பெட்டி தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவன் அதனால் மக்களின் தேவையை அறிந்து அதற்கான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். எல்லா வகையிலும் சுய நலமின்றி பொதுநலத்தோடு பணியாற்றுவேன் என்று பேசினார். முன்னதாக எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மாியாதை செய்தார்.
பின்னர் கழுகுமலை நாடார் உறவின்முறை சங்கத்தில் உள்ள காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். காமராஜர் நகர், இந்திரபிரஸ்தம், சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர். பின்னர் தெற்கு கழுகுமலை, சிஆர் காலணி, சின்ன காலணி, துலுக்கர்பட்டி கரடிகுளம் வேலாயுதபுரம் செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் கயத்தாறு மேற்கு கிழக்கு ஓன்றியங்களில் வேட்பாளர் சிவசாமிவேலுமணி ஆதாித்து கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் கயத்தாறு ஓன்றிய செயலாளர்கள் செல்வகுமார், வண்டாளம் கருப்பசாமி, ஓன்றிய மாணவரணி நவநீதகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஆசூர் காளிப்பாண்டியன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருேகசன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், துணைச்செயலாளர் அந்தோணி பாஸ்கர், மாவட்ட ஜெ பேரவை அவைத்தலைவர் மாாியப்பன், துணைச்செயலாளர் நீலகண்டன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர், நகர இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன், கலைப்பிாிவு போடுசாமி, எம்ஜிஆர் மன்றம் நவநீதகிருஷ்ணன், நீலகண்டன், அண்ணா தொழிற்சங்கம்குமார், வேலாயதபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜோதிசுப்புராஜ், கிளை செயலாளர்கள் பாலமுருகன், கதிரேசன், ராஜாபுதுக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகசாமி, புதிய தமிழகம் முருகையா மற்றும் நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.