செல்லும் இடமெல்லாம் அதிமுகவிற்கு மக்களிடையே எழுச்சி காணப்படுகிறது- அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதாித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பிரச்சாரம்

செல்லும் இடமெல்லாம் அதிமுகவிற்கு மக்களிடையே எழுச்சி காணப்படுகிறது- அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதாித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பிரச்சாரம்

தூத்துக்குடி மக்களவை தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதாித்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ தமிழகத்தில் பாஜக வளரவே இல்லை என்று பேசினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதாித்து வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ வில்லிசோி, சத்திரப்பட்டி, இடைச்செவல், ஊத்துப்பட்டி, மந்திதோப்பு, தோணுகால், ஆலம்பட்டி, படர்ந்தபுளிர், முடுக்குமீட்டான்பட்டி, நாலாட்டின்புதூர், திட்டங்குளம், இலுப்பையூரணி, பாண்டவா்மங்கலம், காிசல்குளம், துறையூர், காமநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில் தேசிய கட்சிகள் மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் தமிழகத்தில் நடந்து கொள்கின்றன. எனவே தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நமது காௌ்கைகளை வலியுறுத்த முடியாது. தமிழகத்தில் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது. பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் அதிமுகவிற்கு மக்களிடையே எழுச்சி காணப்படுகிறது. பாஜக வட இந்தியாவில் வளர்ந்து இருக்கலாம் ஆனால் தமிழகத்தில் வளரவில்லை. பல தேர்தலை நாம் பார்த்துவிட்டோம். பாஜகவுடன் சேர்ந்து நாமும் கீழே போய் விட்டோம். என்றார்.

பிரசாரத்தில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி, பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சத்யா, மாவட்ட பாசறை செயலாளர் கவியரசன், கலைபிாிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, மேற்கு ஓன்றிய செயலாளர்கள் அன்புராஜ், பழனிச்சாமி, அழகர்சாமி, ஆவின்பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ெசண்பகமூர்த்தி, வள்ளியம்மாள், மாாியப்பன், மகளிர் இணைச்செயலாளர் கோமதி, நாலாட்டின் புதூர் கிளைச்செயலாளர்கள் கண்ணன், தாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )