விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து

விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். திமுக உள்பட கூட்டணி கட்சியினர் தீவிரமான வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக தூத்துக்குடி சிறுத்தை குமார், விளாத்திகுளம் குமாரவேல், கோவில்பட்டி கதிரேசன், இளஞ்சேகரன் என்ற சேகா், ஜாபர், ஓட்டப்பிடாரம் பாஸ்கா், சார்லஸ், திருச்செந்தூர் விடுதலை செழியன், வெற்றி வேந்தன், திருவைகுண்டம் திருவள்ளுவன், சுதாகர், ஆகியோரை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், நியமித்துள்ளார்.

இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக இந்தியா கூட்டணி திமுக தேர்தல் காாியாலயத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நோில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்கள் கணேசன், முருகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )