
தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கக்கூடிய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் நிச்சயமாக அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் உரிமை தொகை வந்து சேரும்- கனிமொழி பிரச்சாரம்
தூத்துக்குடி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாெடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்களை மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்து பேசுகையில்
உங்களின் அன்பான வரவேற்புக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, நம்முடைய முதலமைச்சர் தந்த வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் இங்கே இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு கட்டணம் இல்லாத பயணம் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பை, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் கை எழுத்து, விடியல் பயணத்திற்கு தான் .
அதேபோல், கலைஞர் மகளிர் உரிமை தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதை இப்போது தமிழ்நாட்டில் ஒரு கோடி 15 இலட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வரவில்லை என்றால், நிச்சியம் தேர்தல் முடிந்த பிறகு ஒன்றியத்தில் நமது ஆட்சி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் வந்துவிடும். நம்முடைய வரி பணத்தையெல்லாம் மோடி வாங்கி கொண்டு, அதனை திருப்பி கொடுக்கவில்லை. நிதி எல்லாம் உத்தரப்பிரதேசம், மற்ற மாநிலங்களுக்கு தருகிறார்கள், தமிழ்நாட்டிற்கு நிதி முறையாக வருவதில்லை.
தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கக்கூடிய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் நிச்சயமாக மீதி இருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளுக்கும் வரவேண்டிய மகளிர் உரிமை தொகை வந்து சேரும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். அதேபோல், மோடி ஆட்சிக்கு வந்த போது சிலிண்டர் விலை 410 ரூபாய். சில மாதங்களுக்கு முன், சிலிண்டர் விலை 1,200 ரூபாய் இருந்தது, மானியமும் வருவதில்லை. சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்தார் மகளிர் தினம் அன்று, பெண்கள் எல்லாம் சமையல் அறையில் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். தற்போது சிலிண்டர் விலை 900 ரூபாய். ஒன்றியத்தில் நம்முடைய கூட்டணி ஆட்சி வந்தவுடன், முதலமைச்சர் வாக்குறுதி அளித்தது போல், உதயசூரியன் சின்னமும், சிலிண்டர் விலையும், நமது கை செய்கையும் ஒன்றுதான். சிலிண்டர் ரூபாய் 500க்கு வழங்கப்படும். அதேபோல பெட்ரோல் ரூ 75, டீசல் 65, சுங்கச்சாவடி மூடப்படும். விவசாய கடன் ரத்து செய்யப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று பேசினார்.
தூத்துக்குடி என்பது எனது இரண்டாவது தாய் வீடு, உங்களில் ஒருவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து, உங்களோடு பணியாற்ற கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு தர வேண்டும் என்று பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முருகன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் ஐயாத்துரை பாண்டியன், மாவட்ட பிரதிநிதி மாாிச்சாமி, மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.