
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் கிாிக்கெட் விளையாடி இளம் வாக்காளர்களிடம் கனிமொழிக்கு மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தோ்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்தியா கூட்டணியை சாா்ந்த திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி முத்துநகர் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கு வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி, 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களான மாணவர்கள் கிாிக்கெட் விளையாடி கொண்டிருந்த அவர்களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கி கிாிக்கெட் விளையாடி பின்னர் எஸ்எஸ் தெரு மார்க்கெட் பகுதி வியாபாாிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்தார்.
கவுன்சிலர் எடின்டா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், பொதுக்குழு உறுப்பினர் இராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, பொியசாமி, முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் முத்துதுரை, பகுதி மாணவரணி அமைப்பாளர் ஆனந்த், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, யூஜின்ஆவே மாியாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், மின்வாாிய தொழிற்சங்க தலைவா் பேச்சிமுத்து, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, நடராஜன், உள்பட பலர் உடன் சென்றனர்.