சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கனிமொழிக்கு வாக்கு சேகாிக்க வேண்டும்- மேயர் ஜெகன் பொியசாமி கவுன்சிலர்களுக்கு அறிவுரை

சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கனிமொழிக்கு வாக்கு சேகாிக்க வேண்டும்- மேயர் ஜெகன் பொியசாமி கவுன்சிலர்களுக்கு அறிவுரை

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் இரண்டாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து மாநகராட்சி பகுதி முழுவதும் வாக்கு சேகாிப்பது குறித்து கவுன்சிலர்கள் கூட்டம் போல்பேட்டை கீதாஹோட்டல் மீட்டிங்ஹாலில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது.

அனைத்து கவுன்சிலர்களுக்கும் பணியாற்றுவது குறித்து அறிவுரைகள் வழங்கி பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த தொகுதியில் 75 ஆயிரம் வாக்கு அதிகம் பெற்றார். ஆனால் தமிழக முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் அனைத்து தரப்பினரும் பயனடைந்துள்ள திட்டங்கள் அதிகம் உள்ளன. அவற்றையெல்லாம் ஓரு பட்டியலாகயிட்டு நம்முடைய துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகாிக்க வேண்டும். அதே போல் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதலமைச்சாின் அறிவுரையின் படி பல்வேறு வளர்ச்சி பணிக்கான திட்டங்களை அனைத்து பகுதிகளுக்கும் பாகுபாடு இன்றி நாம் 80 சதவீதம் பணிகளை முடித்துள்ளோம். இந்த பணிகளை யெல்லாம் பாராட்டி எதிர்கட்சியினர் கூட நமக்கு வாக்களிக்கும் நிலையுள்ளது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் இரு சாதனைகளையும் தின்னபைிரச்சாரம் மூலம் கொண்டு சேர்த்து பதிவாகும் வாக்குகளில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குபட்ட மாநகராட்சி பகுதி உள்பட 65 சதவீதம் உதயசூாியன் சின்னத்திற்கு வாக்குகள் விழுந்துள்ளது. என்ற பெருமையை பெற்றுத்தர நீங்கள் உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் எனக்கும் மாநகராட்சிக்கும் பெருமை அமைச்சருக்கும் பெருமை முதலமைச்சாின் சாதனையை நாம் முறையாக மக்களிடம் சோ்த்துள்ளோம் என்று முதலமைச்சரே நம்மை பாராட்டும் நிலை வரும் அதற்கேற்றார் போல் பணியாற்றுங்கள்.

சென்னை கோவைக்கு அடுத்தப்படியாக எல்லா கட்டமைப்புகளை உள்ளடக்கி வளர்ந்து வரும் நம்முடைய மாநகராட்சி பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் துறைமுகம், விமானநிலையம், சாலை வசதி, இரயில்வே வசதி, என்ற கட்டமைப்புகளுடன் சுகாதாரம் மருத்துவம், அடங்கிய பகுதிகளை தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஏற்கனவே போக்குவரத்து நொிசல்களை குறைக்கும் வகையில் 1ம் கேட், 2ம் கேட் பகுதியில் சுரங்கபாதை அமைப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்றுள்ளன. அதே வேலையில் விஎம்எஸ்நகர் பகுதியில் புதிதாக ஓரு மேம்பாலம், அமையவுள்ளது. தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் இஎஸ்ஐ மருத்துவமணை பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அனைத்து பணிகளையும் நாம் செய்து கொடுத்திருப்பதை மக்கள் எண்ணிப்பார்ப்பதை நாம் பயன்படுத்திக்கொண்டு வாக்குகளை சேகாிக்க வேண்டும். விடுபட்ட சில பணிகளையும் வரும் 20ம் தேதி முதல் தொடர்ந்து எல்லோரும் இணைந்து பணியாற்றி மாநகர வளர்ச்சிக்கு துணையாக இருப்போம். கனிமொழி எம்பியின் வெற்றிக்கு அதிக வாக்குகள் பெற்று தருபவர்களுக்கு நினைவு பாிசு வழங்கப்படும். உதயசூாியன் சின்னத்திற்கு வெற்றியை தேடி தாருங்கள் என்றார்.

நிகழ்வில், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், கனகராஜ், ரெக்ஸின், ரெங்கசாமி, வைதேகி, ஜெயசீலி, ஜாக்குலின் ஜெயா, சுதா, மெட்டில்டா, பவாணி மார்ஷல், சுப்புலட்சுமி, கண்ணன், சரவணக்குமார், இசக்கிராஜா, பாப்பாத்தி, ராஜேந்திரன், தெய்வேந்திரன், கந்தசாமி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜான், பேபி ஏஞ்சலின், முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, பொன்னப்பன், மகேஸ்வாி, ாிக்டா, நாகேஸ்வாி, சரன்யா, சோமசுந்தாி, அதிஷ்டமணி, மாியகீதா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, சிபிஐ கவுன்சிலர் தனலட்சுமி, சிபிஎம் கவுன்சிலர் முத்துமாாி, இந்திய யூனியன் முஸ்ஸூம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், ராஜ்குமார், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ் மற்றும் ஜோஸ்பா், பிரபாகர், மாாியப்பன், வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )