குஜராத்தில் தினசாி ஆயிரம் கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் வாங்கிய 18 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்- தூத்துக்குடி பிரச்சாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கடும் தாக்கு

குஜராத்தில் தினசாி ஆயிரம் கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் வாங்கிய 18 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்- தூத்துக்குடி பிரச்சாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கடும் தாக்கு

இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாத்திமாநகர் ஜங்ஷன், இரண்டாம் கேட் போஸ்டலில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். ஏபிசிவி. சண்முகம்,மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமயம் மாவட்ட செயலாளர் ஜவாஹா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராஜா, சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில்,

17வது தோத்தலை சந்திக்கும் நாம் ஓரு வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்கும் தோதல். அதிலும் இந்த தொகுதியில் போட்டியிடும் கனிமொழி கடந்த 5 ஆண்டுகாலம் செய்த சாதனைகள் பட்டியலிட்டு கொண்டே போகலாம் மழைவௌளம் தொகுதி காலக்கட்டத்தில் ஆற்றிய பணிகள் ஏராளம் 2014ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை இருந்தது. என்பதை எண்ணி பாருங்கள் 10 ஆண்டு மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உறுதிப்படுத்தி அப்போது 20 கிலோ அசிசி, 20 கிலோ கோதுமை, வழங்கப்பட்ட எல்லோருடைய குழுவையும் மேல்தட்டு படிக்க வேண்டும். என்பதற்காக அப்போதே 25 சதவீதம் இட ஓதுக்கீடு மூலம் ஆங்கிலப் பள்ளியில் படிப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சட்டம் இயற்றியது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றும் விதத்தில் ஓரு கோடியே 15 லட்சம் பேருக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கி விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தது என்ற உத்தரவாதத்துடன், உயர்கல்வியில் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தகுதியான பெண்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 1லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தோ்தல் தெரிவிக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அனைத்து மாநில நிதிகளுக்கும் முறையாக வழங்கப்படும். ஏழை எளியவர்களுக்கு எந்த திட்டமும் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு 70 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தினசாி ஆயிரம் கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் வாங்கிய 18 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்தியா முழுவதும் பல ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு 654 எம்.எல்.ஏக்களுக்கு தலா 25 கோடி வீதம் 18 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். நன்கொடை என்ற பெயாில் தேர்தல் பத்திரம். 2 முதலமைச்சர்கள் கைது, முதலமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் என பலரையும் பிஜேபியை எதிர்க்கின்றவர்களை பொய் வழக்கு பதிவு செய்தது தான் மோடி ஆட்சியின் சாதனை. இதையும் மீறி அடிபணியாத பிஜேபி இல்லாத அரசுகளை கவர்னர் மூலம் மிரட்டுவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் புறக்கணிப்பது அவர்களின் வேலையாக இருக்கும். இந்து முஸ்ஸீம் கிறிஸ்துவம் அவர்களின் மதத்தை பின்பற்றி வாழ்ந்து வரும் இந்தியாவில் இந்த உணவு இந்த உடையை தான் அணிய வேண்டும். என்பது தேவையற்றது. தமிழ்நாடு பொய்யார், காமராஜர், கலைஞர் வாழ்ந்த பகுத்தறிவு மண் பிஜேபிக்கு இடம் இல்லை தமிழகத்தின் வௌ்ளம் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 6 ஆயிரம் முதலமைச்சர் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி ஏன் சிந்திக்கவில்லை. அதிலும் குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 34 ஆயிரம் கோடி கடன் கொடுத்த மோடி அப்போது கட்சத்தீவை மீட்கும் ஓப்பந்தத்தை நிறைவேற்றியதால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்த பிறகு விடுவித்து விடும். ஆனால் மோடி ஆட்சியில் இரண்டு மீனவர்களை சிறையில் வைப்பதும் 120 படகுகளை ஏலம் விட்டதை கண்டு கொள்ளாமல் இருந்த மோடி கட்ச தீவை பற்றி பேசலாமா? மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு துணை சென்று அவருடைய பாதம் தாங்கும் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிக்க வேண்டும். மழை வௌ்ள காலத்தின் போது தமிழகத்திற்கு வராத மோடிக்கு ஓரு விரல் புரட்சியின் மூலம் பாடம் புகட்ட வேண்டும். மோடியை எதிா்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் வல்லமை ராகுல்காந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இருக்கிறது. கனிமொழிக்கு உதயசூயன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

பிரச்சாரத்தில் மாநில சிறுபான்மை நல வாய தலைவர் விஜிலா சத்யானந்த், திமுக மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் மெஜனிட்டா, தொகுதி பொறுப்பாளர் பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெசையா, நிக்கோலாஸ், நலேந்திர மணி. அன்னலட்சுமி, வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், ராஜ்குமார், மாநகர அணி நிருவாகிகள் அருண்சுந்தர், சாகுல்அமீது, ரவி, ஆதர்மச்சாது, பால்ராஜ், வினோத், வட்டச்செயலாளர்கள் லியோ ஜான்சன், அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், பொன். , விஜயராஜ், கோபால், நிர்மல்கிறிஸ்டோபர், ராஜன், குமரமுருகேசன், மதிமுக நிர்வாகிகள் நக்கீரன், மகாராஜன், பொன்ராஜ், மக்கள் நீதிமய்யம் சுசில்ராஜ், அக்பர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )