
தூத்துக்குடி 20-வது வார்டு பகுதியில் கனிமொழி சாதனைகளை துண்டு பிரசுரம் வழங்கி வட்டச்செயலாளர் ரவீந்திரன் வாக்கு சேகாித்தார்
தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தலின்படி 20வது வார்டு வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் உள்ளிட்ட வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று கனிமொழியாற்றிய பணிகளின் சாதனைகள் திமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்தார்.
மாநகர கலை இலக்கிய அணி அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிாி, நிர்வாகிகள் செந்தூர்பாண்டி, சண்முகசுந்தரம், கணேசன், மந்திரம், காளிதாஸ், குமாஸ்தா பாலசுப்பிரமணி, பொியசாமி, ஜெயபாண்டி, இசக்கி, காளிமுத்து, ராமமூர்த்தி, ஸ்ரீதரன், முத்துமணி, ஜெபதீபம், ஆட்டோ பழனி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வௌ்ளையன், கணபதி, மகளிர் அணி தெய்வம், தங்கபாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.