தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி “கரும்பு விவசாயி” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகாிப்பு

தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி “கரும்பு விவசாயி” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகாிப்பு

தூத்துக்குடி நடைபெறவுள்ள ஏப்ரல் 19 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூகஆர்வலர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தூத்துக்குடி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து மக்களிடம் பேசுகையில்

விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி, மற்றும் மாத ஊதியம், டிகிரி முடித்த அனைவருக்கும் அரசு பணியோ அல்லது சுய தொழிலோ தொடங்கிட,  மீனவ  மக்களுக்கு மாத ஊதியம் வழங்குவதோடு அவர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி,  உப்பளத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிடவும்,  டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நெசவுத் தொழில்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிடவும், பட்டப்படிப்பு வரை தனியார் கல்வியில் மாணவர்களுக்கு 50% வரை இலவச கல்வி கிடைத்திட, 50% மதுகடைகளை  மூடியும்,  தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திட குளங்கள், ஏரிகள், ஆறுகள் தூர்வாரி முறையாக பராமரித்திட..  தரமான உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைத்திட.. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரமான மருத்துவம் முற்றிலும் இலவசமாக கிடைத்திட.. சூரிய ஒளி மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திட.. அனைவருக்கும் சொந்தமாக இலவச வீடு கிடைத்திட..  பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைத்திட..  சுங்க சாவடி கட்டணம் முற்றிலும் ரத்து செய்திட பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமை பெற்றிட.. விளையாட்டுத்துறை மற்றும் கணினித்துறை மேம்படுத்திட.. 55 வயதுக்கு மேட்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் பென்ஷன் கிடைத்திட.. வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட.. மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள்  முழுமையாக நிறைவேற்றி அனைத்து பணிகளிலும் லஞ்சம் இல்லாத ேநர்மையான நிர்வாகம் நடைபெற எனக்கு கரும்புவிவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடன் வக்கீல் ரமேஷ்பாண்டியன், உள்பட சமூக ஆா்வலர்கள் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )