ஆபாச படங்களை தனிநபர் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை தனிநபர் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, அபிஷா படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், ஆனால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆபாச படங்கள் பார்ப்பதை தவிர்க்க கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம். 90’s kids எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2k kids ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

எனவே, அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீள அறிவுரை தரும் வகையில் சமூகம் பக்குவமடைய வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )