ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறதா பாஜக? பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லையே

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறதா பாஜக? பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லையே

கடந்த 14ஆம் தேதி ஓபிஎஸ் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய போது பிரதமர் தரப்பில் இருந்தும் அல்லது பாஜகவின் முக்கிய தலைவர்களிடம் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து வரவில்லை.

மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து தான் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தனி அணியாக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஆனால் பாஜகவோ ஓபிஎஸ், பாஜகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்றும் வரும் தேர்தலில் ஓபிஎஸ், பாஜக அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )