லோக்சபா தேர்தல் பா.ஜ.க-வின் வரலாற்று வெற்றியை நோக்கிய பிரசாரம்.

லோக்சபா தேர்தல் பா.ஜ.க-வின் வரலாற்று வெற்றியை நோக்கிய பிரசாரம்.

கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. அதேபோன்று தற்பொழுது நடைபெற இருக்கும் லோக் சபா செய்தல் 2024 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தை தற்போது பாஜக முன்னெடுத்து இருக்கிறது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜ. காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் சுவர் விளம்பரங்களின் வாயிலாக வாக்காளர்களை கவர பா.ஜ. திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வரலாற்று வெற்றியை பெற வேண்டும் என்று உழைப்பில் பாஜக தீவிரமாக தன்னுடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சுவர் விளம்பர பிரசார இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் நட்டா புதுடில்லியில் நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ”வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை வரலாற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். நம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதுடன் உலக அரங்கில் நம் நாட்டின் மதிப்பை உயர்த்திய நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைய பா.ஜ.வுக்கு ஓட்டளியுங்கள்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )