ஒருவரை கைது செய்யும் போது, காவல் துறையினர் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள் என்னென்ன.?.

ஒருவரை கைது செய்யும் போது, காவல் துறையினர் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள் என்னென்ன.?.

நீதிமன்ற உத்தரவுகள்.

(1) கைது செய்கின்ற காவல் அதிகாரி, தனது பெயர் .பதவியுடன் தெளிவாக தெரியும்படி யூனிபார்ம்’ல் இருக்க வேண்டும்.

(2) கைது செய்யும் இடத்திலேயே ‘கைது குறிப்பு’ (Memo of arrest) தயாரித்தல் வேண்டும்; அதில் கைது செய்யப்பட்ட தேதி, நேரம், இடம் மற்றும் குறைந்தது ஒரு சாட்சி கையொப்பமாவது இருக்க வேண்டும்.

(3) கைதான நபர் தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவரத்தை, தனது உறவினர், நண்பர் அல்லது தனது நலனில் அக்கறை கொண்ட ஒருவருக்கு தெரிவிக்கலாம்.

(4) கைது செய்யப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் வேறு மாவட்டத்தில் இருந்தால், கைது செய்ததிலிருந்து 8 – 12 மணி நேரத்திற்குள், கைது செய்யப்பட்ட நேரம், இடம், காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த விவரங்களை காவல் அதிகாரி தெரிவித்திருக்க வேண்டும்.

(5) கைது குறித்த தகவல்களை, தான் விரும்பும் ஒருவருக்கு, கைதுசெய்யப்பட்டவர் தெரிவிக்க உரிமையுடையவர் என்பதை காவல் அதிகாரி, கைதானவரிடம் தெரிவிக்க வேண்டும்.

(6) கைது செய்யப்பட்ட விவரம்,, கைது குறித்து யாருக்குத் தெரிவிக்கப்பட்டது,, கைதானவர் எந்த காவல் அதிகாரியின் பொறுப்பில் உள்ளாரோ அந்த காவல் அதிகாரியின் பெயர்,, இவையனைத்தும் காவல் குறிப்பேட்டில் பதிய வேண்டும் .

(7) கைது செய்யப்பட்டவரை ஆய்வு செய்து, அவரது உடலில் உள்ள சிறிய, பெரிய காயங்கள் பற்றி ஆய்வுக் குறிப்பு (inspection memo) தயார் செய்ய வேண்டும். அதில் கைது செய்யப்பட்டவர் மற்றும் கைது செய்தவர் கையெழுத்திட வேண்டும். கைதானவருக்கு அதன் நகல் வழங்கப்பட வேண்டும்.

(8) கைது செய்யப்பட்ட நபர், காவலில் வைக்கப்பட்ட 48 மணி நேரங்களுக்குள் மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

(9) கைது குறித்த ஆவணங்களின் நகல்கள் அனைத்தையும், குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) அனுப்ப வேண்டும் .

(10) கைது செய்யப்பட்டவர் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

(11) கைது செய்த விவரம் மற்றும் காவலில் வைத்துள்ள இடம் குறித்து , 12 மணி நேரத்திற்குள் மாநில மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கைது செய்த அதிகாரி, தகவல் தெரிவிக்க வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )