நாடுகளும், அவைகளின் பிரியமான மதுபானமும்
பீயர் ஒயின் விஸ்கி, பிராந்தி வகை பிற தகவல் இல்லைகணக்கீடு பற்றி
நீங்கள் ஆல்கஹால் உட்கொள்ளும் தகவலுடன், உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் தளத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகையால் உட்கொள்ளப்படும் சராசரி பீர், ஒயின், ஆல்கஹால் பானம் மற்றும் பிற பானங்கள் அனைத்தும் சேர்த்து, நெருக்கமாக பொருந்தும் நாட்டின் கணக்கீடு மேற்கொள்ளப்படும்.
15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண், மற்றும் மது அருந்துபவர்கள், மற்றும் மது அருந்தாதவர்கள் என அனைவரும் அதில் அடங்குவர்.
பைண்ட் பீயர் அல்லது சைடரில் சராசரியாக ஐந்து சதவீதமும், ஒயினில் 12 சதவீதமும், ஆல்கஹால் பானங்களில் 40 சதவீதமும், ஆல்கஹால் கலந்த ஒயினில் 17.5 சதவீதமும் மற்றும் சேக் ஒயினில் 9 சதவீதமும் ஆல்கஹால் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பதாக கருதப்படுகிறது.
ஒரு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஆல்கஹால் உட்கொள்ளுதல் தகவலை சேகரித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிடுகிறது; வரி ரசீதுகள் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி தகவலை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்ட பானங்களின்படி அது அமைகிறது.
மேலும் இந்த நிறுவனம் “கணக்கில் வராத” ஆல்கஹால் உட்கொள்ளுதலையும் கணக்கிட முயற்சிக்கிறது. வீடுகளில் தயாரிக்கப்படும் அல்லது நாட்டில் கடத்தி கொண்டு வரப்படும் அல்லது மனிதர்கள் உட்கொள்ளுதலுக்கல்லாமல் இருக்கும் வட்டாரங்களில் இருந்து எடுத்த தகவல்கள் அதில் சேர்க்கப்படுகிறது.
இந்த இரண்டாம் வகை அதிகாரப்பூர்வ வகையை காட்டிலும் அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதில் அனைத்திலும் அதிகமாக மால்டோவா நாடு உள்ளது என்று ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்படியும் வல்லுநர்களின் கருத்துபடியும் தெரிகிறது.
அதன் விளைவாக இந்த பக்கத்தில் உள்ள புள்ளியியல் விவரம் நிச்சமயற்ற நிலையில் இல்லை.
மேலும் விவரங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்க்கவும்.
ஒவ்வொரு பானங்களிலும் எத்தனை யூனிட் ஆஹ்கஹால் உள்ளது?
ஒரு ஷாட் ஆல்கஹால் பானத்தில்(25மிலி): 1யூனிட்
சாதாரண அளவு கொண்ட ஒயின் கோப்பை(175மிலி): 2.1யூனிட்டுகள்
பெரிய ஒயின் கோப்பை (250மிலி): 3யூனிட்டுகள்
4% ஆஹ்கஹால் அளவு கொண்ட பீரின் ஒரு பைண்ட்: 2.3 யூனிட்டுகள்
5% ஆஹ்கஹால் அளவு கொண்ட பீரின் ஒரு பைண்ட்: 2.8 யூனிட்டுகள்
8% பைண்ட சைடர்: 4.5 யூனிட்டுகள்
ஆல்கஹால் அளவு – அதிகார பூர்வ அறிவுரை
மூன்று அல்லது நான்கு யூனிட்டுகளுக்கு மேலாக ஆல்கஹாலை எடுத்துக் கொள்ளும் ஆண்கள் அதிகப்படியான உடல் உபாதைகளுக்கும் மேலும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகமாகிறார்கள் என்று இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.
பெண்களுக்கு அந்த அளவு, இரண்டு அல்லது மூன்று யூனிட்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபடியாக குடிக்கும் சமயங்களில் மோசமான உடல்நிலை ஆபத்துக்கள் நேரிடும் என்றும், அதிகமாக ஆல்கஹால் உட்கொண்டால் அடுத்த 48 மணி நேரம் அதை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள மக்கள் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது ஆல்கஹாலை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அதிகாரப்பூர்வ அறிவுரையாகும்.
ஒரே சமயத்தில் 7.5 யூனிட்டுகள் மது உட்கொள்வது அதிகப்படியாக ஆல்கஹால் உட்கொள்வதாக கருதப்படுகிறது.
இந்த அளவிற்கு மாதம் ஒரு முறை குடித்தால் கூட, சராசரி ஆல்கஹால் உட்கொள்ளும் அளவு குறைவாக இருந்த போதும் “மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும்