மருத்துவர்கள் மீது கவனக்குறைவு என்று புகார் கொடுக்கலாமா.?. – உச்சநீதிமன்ற தீர்ப்பு

மருத்துவர்கள் மீது கவனக்குறைவு என்று புகார் கொடுக்கலாமா.?. – உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஜேக்கப் மேத்யூ – எதிர் – பஞ்சாப் மாநில அரசு – 2005 – 3 – CPR – 700 ] – என்ற வழக்கில் மருத்துவர் மீது கவனக்குறைவு என்று அளிக்கப்படும் பொய் புகார்களில் இருந்து மருந்துவர்களை காப்பாற்றவது அவசியம் என்று உணர்ந்த உச்சநீதிமன்றம் அது குறித்து சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

( 1 ) மருந்துவக் கவனக்குறைவு அல்லது பொறுப்பற்ற தன்மை என்கிற குற்றச்சாட்டுகள் ஒரு மருந்துவர் மீது சுமத்தம்பட்டுள்ள நிலையில் அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக தகுதி பெற்ற மற்றொரு மருந்துவரிடமிருந்து கருத்துரையைப் பெற்று புகார்தாரர் தாக்கல் செய்யாத நிலையில் ஒழு தனிநபர் புகாரை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடாது.

( 2 ) ஒரு மருத்துவர் கவனக்குறைவாக அல்லது பொறுப்பற்ற தன்மையில் செயல்பட்டுள்ளார் என்று காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக புலன்விசாரணை அதிகாரி அது குறித்து ஒரு கருந்துரையை அரசு பணியிலுள்ள ஒரு மருத்துவரிடம் குறிப்பாக எந்த பாரபட்சமும்மில்லாமல் பரிசோதனைக்குட்பட்டு கருத்துரையை அளிக்க கூடிய மருந்துவரிணமிருந்து பெற வேண்டும்.

( 3 ) ஒரு மருத்துவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டி சுமத்தப்பட்டுள்ளது என்பதற்காக அந்த மருத்துவரை வழக்கமான நடைமுறைப்படி கைது செய்யக்கூடாது.அவரை கைது செய்வது புலன் விசாரணைக்கு அவசியமானது என்கிற நிலையில் அல்லது ஆதாரங்களை சேகரிப்பதற்கு அல்லது வழக்கு விசாரணையின் போது அவர் முன்னிலையாக மாட்டார் என்று புலன் விசாரணை அதிகாரி கருதும் நிலையில் மடங்கு மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட மருந்துவரை கைது செய்யலாம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )