பிஜேபி தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்

பிஜேபி தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்

பிஜேபி தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் அதிமுகவில் ஐக்கியம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளராக இருப்பவர் பெரியதாழை
எம். ராஜ் இவர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளை அதிமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அவருடன் பாஜக மீனவர் பிரிவு நிர்வாகிகள் அபிஷேக் ஜார்ஜ் ஆகியோரும் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அப்பாதுரை, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )