முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி காய்கனி மாா்க்கெட்டில் வாக்குகள் சேகாித்தாா் –   கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி காய்கனி மாா்க்கெட்டில் வாக்குகள் சேகாித்தாா் – கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இந்தியா கூட்டணி தூத்துக்குடி திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார்.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ராமநாதபுரம், தொகுதி வேட்பாளர்களை ஆதிக்க பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் காலையில் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர், தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் கனிமொழிக்கு வாக்குச் சேர்க்கைக்கு வந்த முதல்வரை மார்க்கெட் செயலாளர் மணிராஜ், மேலாளர் நியூட்டன், உதவியாளர் ரவி, ஆகியோர் வரவேற்றனர். . அங்கிருந்த பொதுமக்கள், வியாபாிகளிடம் கை குலுக்கி நலம் விசாரித்து உதயசூயன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். பின்னா் லயன்ஸ் டவுன் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டறிந்த அவர் மீனவ குடும்பத்தில் தேநீர் அருந்தினார்.

பின்னர், முக்கிய சாலைகள் வழியாக பொதுமக்களிடம் தனது கையை உதயசூரியன் வடிவில் கண்டு கும்பிட்டும் வாக்குகளை சேகாத்து சென்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலனும் மற்றும் மகளிர் ஊமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேய் ஜெகன் பொியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாசிசங்கார், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஓன்றிய செயலாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர்கள் மகன் சிங் பரமசிவன், பால்ராஜ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சிவக்குமார், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபேரியல்ராஜ், பாலசுப்பிரமணியன், ஓன்றிய கவுன்சிலர் பாலன், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், சரவணக்குமார், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மாவட்டத் தலைவர் கண்ணப்பன், பொன்னப்பன். , மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, முத்துராஜா, செந்தில்குமார், பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தராஜ், ஜெயசிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் காசிம், மணி, கருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )