தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சண்முகபுரம் பரிது பேதுரு ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஏந்தி வி.இ.ரோடு, ஜார்ஜ் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.
ஆலயத்தின் முன்பாக அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டி முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி கிறிஸ்தவ மக்களிடம் ஒட்டு சேகரித்து ஆதரவு திரட்டினார்.

பின்னர் ஆலயத்தில் குருத்துவ செயலாளர் இமானுவேல் வால்ஸ்ட்ராக், பங்குத் தந்தை ஜெபஸ்டின் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்தார். பின்னர் அ.தி.மு.க.வினர் குருத் தோலையுடன் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.
ஞானராஜ், பிரபாகர், சுந்தர், முன்னாள் மத்திய கூட்டுறவு பாங்க் தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால், அவைத் தலைவர் வக்கீல் ஜெ.ஜெ குமார், ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் சீனிவாசன், மாரியப்பன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்ராஜ், சகாயராஜ், முன்னாள் வட்டச் செயலாளர் அசோகன், மற்றும் முனியசாமி, டெரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )