
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி களமிறங்கியுள்ள நிலையில் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து வரும் நிலையில் லாாி புக்கிங் சங்க செயலாளர் சுப்புராஜ், தொழிலதிபர் மாணிக்கம், உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேட்பாளர் சிவசாமி வேலுமணி கேட்டுக்கொண்டார். தருவை மைதானம், முத்துநகர் கடற்கரை, பகுதியிலும் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகாித்தார்.
இதில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புசாரா அணி செயலாளர் சுதாகர், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், வட்டச்செயலாளர்கள் அருண்குமார், மில்லை ராஜா, அவைத்தலைவர் வக்கீல் குமார், மற்றும் ஜோசப், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.