நாடாளுமன்ற தோ்தலில் மாப்பிள்ளை யூரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும், எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்

நாடாளுமன்ற தோ்தலில் மாப்பிள்ளை யூரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும், எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், 3 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் பாக முகவர்கள் பூத்கமிட்டி, உள்ளிட்ட கூட்டங்கள் நடத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள கிழக்கு திமுக சார்பில் அனைத்து கிளைப்பகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வள மீனவர் நலன் கால்நடை பரிபாலனம் துயற அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பூத்நம்பர் 96க்கு திடீரென திமுக தலைவர் சரவணன் அணிவகுப்பு மரியாதை அளித்தார். பின்னர் தேர்தல் நிலவரம் மற்றும் பணிகள் குறித்து நிா்வாகிகளிடம் கேட்டறிந்த அவர் வரும் நாடாளுமன்ற தோ்தலில் இந்த மாப்பிள்ளையூரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையும் அதற்கு தகுந்த அங்கீகாரமும் வழங்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி இந்தியாவை ஆள அனைவரும் ஓருமையுடன் களப்பனியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமைசங்கர், மாவட்ட இளைஞர் அணி அபைபலர் ராமஜெயம், துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மோயி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, கிழக்கு மாகாண திமுக துணைத் தலைவர் ராமசங்கர் கணேசன், ஓன். அணி அமைப்பாளர் சோனாராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஓன்றிய உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பாய், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )