இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தென் தமிழகத்தில் தொழில்புரட்சி ஏற்படும் – அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் கனிமொழிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாக்குகள் சேகரித்தார்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தென் தமிழகத்தில் தொழில்புரட்சி ஏற்படும் – அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் கனிமொழிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாக்குகள் சேகரித்தார்

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகாித்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகாித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 3 தொகுதிகளிலும் பிரச்சாரத்தை முடித்து விட்டு களப்பணியாற்றி வரும் நிலையில் தூத்துக்குடியில் உள்ள அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்திற்கு சென்ற அமைச்சர் கீதாஜீவனை தலைவர் தமிழரசு தலைமையில் பொதுச்செயலாளர் சங்கர்மாாிமுத்து, துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், இணைச்செயலாளர் ராஜேஷ் பாலசந்திரன், ஆகியோர் வரவேற்றனர்.

சங்க அலுவலகத்தில் கலந்துரையாடல் மூலம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நமது மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கி வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகாலமாக ஓன்றிய அரசின் சில நடவடிக்கைகள் மூலம் எல்லா தரப்பினரும் ஓவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அதே போல் தொழில் வளமும் வேலைவாய்ப்பும் இல்லாத நிலை தொடர்கிறது. தமிழகத்தில் முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில் தொழில்புரட்சி ஏற்பட்டுள்ளது. வௌிநாடுகளுக்கு சென்று தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு பல தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்ததின் காரணமாக பல மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் வரப்பெற்றுள்ளன.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வரும் போது 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நமது மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை பா்னிச்சர் பார்க் வருவதன் மூலம் உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களை போன்ற தொழிலதிபர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற கட்டமைப்புகளை முதலமைச்சர் உருவாக்கி ெகாடுத்து உங்களுக்கு எப்படி துணையாக இருக்கிறார். அதே போல் கனிமொழி எம்.பியின் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் ராக்கெட் ஏவுதளம் முழுமைபெறும் காலத்தில் கூடுதல் தொழில்வளர்ச்சி ஏற்படும்.

விமானம் நிலையம் விாிவாக்க பணி நடைபெறுகிறது. அது முடிவு பெற்றதும் இரவு நேர விமான சேவையும் தொடங்கும் நேரத்தில் கூடுதலாக வௌிநாட்டு தொழிலதிபர்கள் வந்து செல்வதற்கு வசதியை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் எல்லா தொழில்வளமும் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் அதற்கு முழுமையாக திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும். இந்தியாவில் உள்ள உங்களது நட்பு தொழிலதிபர்களிடமும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். என்று நீங்கள் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வா்த்தக தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் பாலசங்கா், பொன்குமரன், ரமேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )