
தூத்துக்குடி 14வது வார்டு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட ஐயப்பன் நகர், அன்னை இந்திரா நகர், பாரதிநகர், வி.எம்.எஸ். நகர், நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கிக்கூறி, வேட்பாளர் கனிமொழி-க்கு உதயசூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்வில், மாநகர துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்டச் செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட கழக பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மேயரின் உதவியாளர் பிரபாகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்