
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி
தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, இன்று (17/04/2024) புதன்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகில், நாசரேத் பேருந்து நிலையம் அருகில், ஏரல் காந்தி சிலை அருகில் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நிகழ்வில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!