
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கட்சி பணிகளில் ஆக்டிவ்வாக செயல்பட முடியவில்லை. ஆனால் தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர் இறந்து 14 நாட்கள் ஆன நிலையில் தேமுதிக அலுவலகத்தில் அவரது சமாதிக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.
அங்கு விஜயகாந்த் குடும்பத்தினரும் கட்சியினரும் அன்னதானம் செய்கிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார் பிரேமலதா. கேப்டன் இருக்கும்போதே பொதுக் குழு, செயற்குழு கூட்டப்பட்டு அவரிடம் இருந்த பொதுச் செயலாளர் பதவி பிரேமலதாவுக்கு கை மாறியது.
கேப்டன் இறந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது ட்விட்டர் கணக்கை மாற்றியுள்ளது ரசிகர்களிடமும் கட்சியினரிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரேமலதா premallatha vijayakant @imPremallatha என மாற்றியுள்ளார். இதில் பிரேமலதாவில் எதற்காக இரு விஷயங்களை போட்டிருக்கிறார்.