உ.பி.யில் அஜ்மீர் – சீல்டா விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்து இருவர் உயிரிழப்பு, பலர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர் – சீல்டா விரைவு ரெயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜ்மீரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சீல்டா நோக்கி சென்ற விரைவு ரெயில் (எண் 12988 ) இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கான்பூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ருரா – மேதா ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. காலை 5:20 மணியளவில் ரெயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவ உதவி குழுவும் சம்பவம் நேரிட்ட பகுதிக்கு விரைந்து சென்றது.
ரெயில் விபத்துக்குள் சிக்கிய பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இவ்விபத்தில் 40 பயணிகள் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சேலான காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரம் காட்டி உள்ளனர். இச்சம்பவத்தினை அடுத்து அம்மார்க்கமாக செல்லும் ரெயில்களின் சேவையானது மாற்றிவிடப்பட்டு உள்ளது.
விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரெயில் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரியவரவில்லை. விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகளை அகற்றி தண்டவாளத்தை சீர்செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய மந்திரி சுரேஷ் பிரபு
இதற்கிடையே மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு விரைவு ரெயில் தடம்புரண்டது தொடர்பாக தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டு உள்ளார். உயர் அதிகாரிகள் விபத்து நேரிட்ட பகுதிக்கு உடனடியாக செல்ல உத்தரவிட்டு உள்ளேன். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க கேட்டுக் கொண்டு உள்ளேன். ஒரு முழுமையான விசாரணையின் மூலம் ரெயில் விபத்து நேரிட்டதற்கான காரணம் தெரியவரும். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்படும் என்று சுரேஷ் பிரபு கூறிஉள்ளார்.
முன்னதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா, முதல்கட்ட தகவல்களின்படி விபத்து காரணமாக உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை. கான்பூரில் இருந்து மருத்து உதவியுடன் ரெயில் சென்று உள்ளது. மீட்பு குழுவினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம், என்றார். உள்ளூர் போலீசார் அகமது ஜாவித் பேசுகையில், தடம் புரண்ட ரெயில்களில் இருந்து அனைத்து பயணிகளையும் மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது என்றார்.
விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரெயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.
உதவி எண்கள்:-
கான்பூர்: 0512-2323015, 2323016, 2323018
அலகாபாத்: 0532-2408149, 2408128, 2407353
துண்டாலா: 05612-220337, 220338, 220339
அலிகார்க்: 0571-2404056, 2404055