பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பொன்முடி.

இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )