ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கம் இல்லை -தமிழக அரசு விளக்கம்

ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கம் இல்லை -தமிழக அரசு விளக்கம்

குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாவிட்டால், பொருட்கள் குறைக்கப்படும் என்று செய்தி வெளியானது. அது உண்மை இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

மேலும், கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது; குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட மாட்டாது. ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ளாவிடில் பெயர்கள் நீக்கப்படுமென வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி 63% முடிந்துள்ளது. இதற்கென தனி முகாம்கள் நடத்தவும் தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )