தமிழகத்தில் தாமரை, இரட்டை இலை, பலாப்பழம் மூன்றையும் குக்காில் வைத்து அவிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டுள்ளார் – தூத்துக்குடியில் சு.ப வீரபாண்டியன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தாமரை, இரட்டை இலை, பலாப்பழம் மூன்றையும் குக்காில் வைத்து அவிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டுள்ளார் – தூத்துக்குடியில் சு.ப வீரபாண்டியன் குற்றச்சாட்டு

இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து வஉசி சந்தை காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஐ மாநகர செயலாளர் முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமதுஇக்பால், ஆகியோர் முன்னிலையில்

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் பேசுகையில் மழையால் வௌ்ளம் சூழந்த போது இந்த மாவட்ட மக்களோடு நீந்தியவர் கனிமொழி சென்னையிலும் நாங்கள் வௌ்ளத்தை சந்தித்தோம். ஆனால் தூத்துக்குடியில் கடுமையான மழை பொழிவு வௌ்ளம் அதற்கு 37 ஆயிரம் கோடி வேண்டும் என்று ஓன்றிய அரசிடம் தமிழக முதலமைச்சர் வைத்த கோாிக்கை இன்று வரை நிறைவேறவும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறவும் வரவில்லை. ஓரே நாடு ஓரே தேர்தல் என்று கூறி ஓவ்வொருவருடைய கலாச்சாரம் உடைகள் உள்ளிட்டவைகளை இவர்கள் தீர்மானிக்கும் நிலை வரக்கூடாது. மொழியால் மதத்தால் பிாித்து நாட்டை துண்டாக்க நினைக்கும் பிஜேபி இனி ஆட்சிக்கு வரக்கூடாது. எதிா்கட்சிகளையும் தன்னை எதிர்ப்பவா்களையும் அமலாக்க துறை சிபிஐ என பல துறைகள் மூலம் மிரட்டுவதும் வழக்கு தொடுப்பதும் அவர்களது வாடிக்கையாகவுள்ளது. பிஜேபியில் இணைந்தால் அவர்கள் சுத்தமானவர்கள் ஆகிவிடுகிறாா்கள். இப்படி தான் அஜித்பவார், பிரபுபடேல், சுபேந்து அதிகாாி உள்ளிட்டவர்கள் அடக்கம். நேர் வழி அரசியலில் செல்லாமல் குறுக்குவழி அரசியலை கையாண்டு வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்ற தொலைநோக்கு பார்வையோடு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். 1929ல் செங்கல்பட்டில் சுயமாியாதை மாநாடு நடத்தப்பட்டு அப்போது பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல ஆண்டுகள் கடந்து கலைஞர் ஆட்சியில் அது சட்டமாக்கப்பட்டது இன்று அதன் பலனை தமிழகத்தில் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றன. அதே போல் பேருந்து இலவச பயணம் ஆயிரம் உாிமைத்தொகை, இவையெல்லாம் பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு மட்டுமின்றி அவர்களும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் தான் தமிழகத்தில் தாமரை இரட்டை இலை பலாப்பழம் இவை மூன்றையும் குக்காில் வைத்து அவிக்கும் வேலையை பிஜேபி மூலம் மோடி செய்துள்ளார். ராமதாஸையே அடிபணிய வைத்த இவர்கள் திமுகவை ஓரு காலம் அடிபணிய வைக்க முடியாது. 2022ல் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி தமிழக்தில் பிஜேபி ஓரு காலத்திலும் வெல்ல முடியாது என்று நம்மீது நம்பிக்கை வைத்து பேசினார். அதை மனதில் கொண்டு இந்தியா கூட்டணியை இந்தியா முழுவதும் வெற்றி பெற வைப்பதற்கு நம்முடைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் இணைந்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். அதன்மூலம் மிகப்பொிய மாற்றும் ஏற்படும் கனிமொழிக்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

திமுக மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், அன்பழகன், வக்கீல் பாலகுருசாமி, சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், ஆர்தர்மச்சாது, ரவி, கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், ரிக்டா, கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், கங்காராஜேஷ், லியோஜான்சன், பொன்ராஜ், முனியசாமி, முக்கையா, சிங்கராஜ், மாநில பேச்சாளர் இருதயராஜ், மற்றும் உலகநாதன், ஜெயசிங், உள்பட மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், நிர்வாகிகள் மகாராஜன், முருகேசன், தொம்மை, பொன்ராஜ், மக்கள் நீதமய்யம் மாவட்ட துணைச்செயலாளர் அக்பர், தொகுதி செயலாளர் சுசில்ராஜ், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜீனன் ராஜா உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )