திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினமான இன்று (11/04/2024) அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தது.

செய்தியாளர் சதீஷ் 

நேற்று இரவு முதலே குவிந்த பக்தர்கள் கூட்டம் இன்றுஅதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதனால் பொது தரிசன வரிசை, ரூ. 100 கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )