தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் பிள்ளை விநாயகம், சந்தனகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள்தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது

இதில் தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.தனசேகர் டேவிட் மற்றும் வழக்கறிஞர் மார்க்கஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு மைக்கில்சாந்தா போர் ஜிரியா, முத்துலட்சுமி, சண்முக சுந்தரராஜ், தெய்வீக தொல்காப்பியன் ஆகிய நான்கு பேரும் செயலாளர் பதவிக்கு செல்வின், சுரேஷ்குமார் வெற்றிவேல் ஆகிய மூன்று பேரும், இணை செயலாளர் பதவிக்கு ஆரோக்கிய மேரி, ஜஸ்டின், சண்முகராஜா ஆகிய மூன்று பேர்களும் பொருளாளர் பதவிக்கு கணேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகிய மூன்று பேர்களும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும் செயற்குழு உறுப்பினர் பெண்கள் பதவிக்கு ஐந்து பேரும் போட்டியிடுகின்றனர்.

வருகிற 30-ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அன்று இரவே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )