
தூத்துக்குடியில் புரோட்டா சுட்டு கரும்பு விவசாயி சின்னத்திற்கு அருணாதேவி வாக்கு சேகாித்தார்
தூத்துக்குடி : இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஓரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் பொது நல அமைப்பை சேர்ந்தவர்களும் என 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், முதலமைச்சர் ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக அனைவராலும் பாா்க்கப்படுகிறது. இருப்பினும் 28 பேர் களத்தில் வேட்பாளராகவுள்ளனர்.
அதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், பல்வேறு பொதுநல அமைப்புகளில் ஈடுபட்டு ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பல ஆண்டுகளாக பல்ேவறு உதவிகளை செய்தது மட்டுமின்றி ஸ்டெர்லைட் தேவையில்லை என்று கூறி எதிர்ப்பாளர்களுடன் இணைந்து பல்ேவறு கட்ட போராட்டங்களை முன்நின்று நடத்தி மாவட்ட கலெக்டர், எஸ்.பி, உள்ளிட்ட பல அதிகாாிகளிடம் கோாிக்கை மனுக்கள் வழங்கியது மட்டுமின்றி கொரோனா மழை வௌ்ள காலத்தின் போதும் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தாா்.
இதனையடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி 6 தொகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகாித்து அந்த பகுதியில் இருக்கும் குறைகளை கேட்டறிந்து நான் வெற்றி பெற்றால் அதை முழுமையாக செய்து கொடுப்பேன். என்ற வாக்குறுதியை அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மக்கள்நலனில் அக்கறையுடன் செயல்படாமல் கடமைக்கு பணியாற்றுகிறார்கள் நான் கடமை உணா்வோடு பணியாற்றுகிறேன்.
உங்களுக்காக உழைத்திட எனக்கு ஓரு வாய்ப்பு தாருங்கள் என எளிமையான முறையில் வாக்குகளை சேகாித்து புரோட்டா கடையில் புரோட்டா சுட்டும் தேநீர் கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீா் அருந்தி வாக்கு சேகாித்து வருகிறார்.