
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடக்கம்- மீன்களின் விலை உயர வாய்ப்பு
தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் அதிகளவில் மீன்கள் பிடிபடுவதால், மீன்வளம் குறைந்து வருவதாகவும் கருதப்பட்டது. இந்தாண்டு இன்று 15/04/2024 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து உள்ளது.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.
தடைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.
CATEGORIES Uncategorized