தூத்துக்குடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை- ஏற்பாடு பணிகள் தீவிரம்

தூத்துக்குடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை- ஏற்பாடு பணிகள் தீவிரம்

இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுவதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டேவிஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் அருகில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கனிமொழியை ஆதரித்து இன்று இரவு 7 மணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதற்கான முன்னேற்பாடுகளுக்கான பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாா் பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் முன்னேற்பாடுகளுக்கான பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து, ஊன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, ஊன்றிய உதயநிதி ஸ்டாலன் நற்பனி மன்ற தலைவர் பாய், கிளைச்செயலாளர் மகாராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )