ஹிலாரியை விட குறைந்த ஓட்டு பெற்ற ட்ரம்ப் அதிபராவது ஏன்? அமெரிக்க தேர்தலின் சூட்சுமம் இதுதான்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பை விட, அதிக வாக்குகளை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்தான் பெற்றிருந்தார். அப்படியும் அவர் தோற்க என்ன காரணம் என்பதை அறிவதில்தான் அமெரிக்க தேர்தல் நடைமுறையின் சூட்சுமம் அடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்கி்ழமை நடைப்பெற்று, வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் கணிப்புகள் அனைத்துமே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என கூறிவந்த நிலையில், அவற்றை பின்னுக்குத்தள்ளி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.