Breaking News

கவர்ச்சி, நாலு பாட்டுக்கு நடனம் என்று மட்டுமில்லாமல், அழகு, திறமை, உடல் வலிமை என தன்னை தானே ஒரு சிறந்த நடிகையாக செதுக்கி வருகிறார் சமந்தா.

ஆரம்பத்தில் கதை தேர்வில் சற்று சொதப்பி இருந்தாலும், கடந்த வருடங்களில் வெளியான பெரும்பாலான படங்கள் தன் திறமைக்கும் தீனிப் போடும் வகையில் தெரிந்தெடுத்து தனக்கான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார் நடிகை சமந்தா.

இதோ, நடிகை சமந்தா பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்..

தனது இருபதுகளில் பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்தி கொள்ள, நிறைய பகுதிநேர வேலைகள் செய்து வந்துள்ளார் சமந்தா. அதன் ஒரு பகுதியாக மாடலிங்கும் செய்து வந்தார். அந்த நேரத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கண்ணில் பட திரையில் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

அரசு சாரா அமைப்பு!
ப்ரத்யுஷா எனும் அரசு சாரா அமைப்பு மூலம் சில பகுதிகளில் உதவி செய்து வருகிறார் சமந்தா. இந்த அமைப்பின் மூலமாக ஏழை குழந்தைகள் மற்றும் முடியாத பெண்களுக்கு உதவுகிறார். சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் குவிக்கும் நடிகைகள் மத்தியல் தனித்து நிற்கிறார் சமந்தா

சமந்தாவின் தந்தை தெலுங்கர், தாய் மலையாளி. ஆனால், சமந்தா தன்னை ஒரு தமிழச்சி என கூறிக் கொள்வதில் தான் பெருமை கொள்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் செங்கல்பட்டு மற்றும் சென்னை தான்.


நடிகை சமந்தாவின் இன்ஸ்பிரேஷன் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன். இவர் ஒரு பிரபல ஹாலிவுட் நடிகை ஆவார். தனது இயல்பான நடிப்பால் தனித்துவம் பெற்ற நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிப்பு மட்டுமல்ல, படிப்பிலும் சமந்தா படுசுட்டி தான். வகுப்பில் டாப் மாணவி சமந்தா என இவரது ஆசிரியர்கள் கூறுகின்றனர்

நடிகை சமந்தா சன் ஆப் சத்தியமூர்த்தி எனும் தெலுங்கு படத்தில் நீரிழிவு நோயாளியாக நடித்திருப்பார். ஆனால், உண்மையிலேயே இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.