செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல்
ஜனவரி 1-ந் தேதியில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
புதிய ரூ.500 நோட்டு
புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு முன்கூட்டியே அச்சிடப்படாததற்கு என்ன காரணம் என்றால், செல்லாத நோட்டு பற்றிய அறிவிப்பு, முன்கூட்டியே கசிந்து விடும் என்பதால்தான்.
அதிலும், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, நவம்பர் 10-ந் தேதிக்கு பிறகுதான் தொடங்கியது.
முற்றிலும் ரொக்கம் இல்லா பரிமாற்றத்தை கொண்டு வருவது அரசின் நோக்கம் அல்ல. குறைந்த அளவில் ரொக்கத்தை பயன்படுத்தும் முறையை கொண்டு வருவதற்கே முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.