குடியரசு தின விழாவில் முதன்முறையாக கொடியேற்றினார் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம்
68-ஆவது இந்திய குடியரசு தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழாவின்போது தேசியக்கொடியை கவர்னர் ஏற்றி வைப்பதுதான் வழக்கம்.
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் குடியரசு தினத்தன்று மராட்டிய மாநிலத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார். எனவே தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்வாக தேசியக்கொடியை முதல்-அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக சென்னை போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குடியரசு தின விழாவில் முதன்முறையாக முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கொடியேற்றினார். குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் முப்படை சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் விருது வழங்கினார். தொடர்ந்து குடியரசு தின விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் காலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நன்றி : தினத்தந்தி