பெற்றோர் சம்மதத்துடன் பிப்.,6-ம் தேதி சாட்னா – கார்த்தி திருமணம்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருந்தார் சாட்னா. சிலமாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தியை, சாட்னா டைட்ஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
தன் மகளை ஆசைக்காட்டி எங்களிடமிருந்து கார்த்தி பிரித்துவிட்டார் என்று சாட்னாவின் அம்மா, மாயா கண்ணீர் மல்க கூறினார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கார்த்தியுடன் திருமணம் செய்ய நேரிட்டது என்று சாட்னாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கார்த்தி – சாட்னா திருமணம் முறைப்படி நடைபெற இருக்கிறது. இருவீட்டாரது சம்மதத்துடன் வருகிற பிப்., 6ம் தேதி சேலத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து பிப்., 10-ம் தேதி சென்னை, வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இதில் திரையுலகினரும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி : தினமலர்