1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து உயர்த்த இலக்கு -அருண் ஜெட்லி
2017- 18 மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட்டாகும்.இது ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டாகும். * நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளது
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு
* 1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து உயர்த்த இலக்கு
* 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்
* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு
* நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்
* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு
* கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு