வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் நீங்கும்: சக்திகாந்த தாஸ்
டெல்லி: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் நீங்கும் என பொருளாதார விவாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரு சிலர் மட்டுமே வாரத்திற்கு ரூ.24000 பணம் எடுக்கின்றனர் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.