நடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தம்
நடிகை பாவனாவுக்கு நேற்று எளிமையான முறையில் அவரது இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
மலையாள முன்னணி நடிகை பாவனா கடந்த 17-ம் தேதி கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து, காரில் சென்றபோது பாலியல் தொல்லைக்கு ஆளானார். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த மார்ட்டின், பாவனாவிடம் முன்பு வேலை பார்த்த பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில்குமார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் சுனில்குமார் கூறும்போது, “பாவனாவுக்கு தொல்லை கொடுத்தபோது, அக்காட்சியை பதிவு செய்த செல்போனை, சாக்கடையில் வீசிவிட்டேன்” என கூறியிருந்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சாக்கடையில் போலீஸார் தேடினர். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு விசாரணை முடிவடைவதில் சுணக்கம் இருந்தது.
இதுகுறித்து கேரள காவல் துறையினர் கூறும்போது, “சுனில்குமார், விஜேஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தோம். அவர்களின் காவல் இன்றுடன் (10-ம் தேதி) முடிகிறது. சுனில்குமார் செல்போனை, தனது வழக்கறிஞர் பவுலோஸ் வசம் ஒப்படைத்திருந்தார். அதை அவர் ஆலுவா நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அந்த செல்போன் ஆய்வுக்காக திருவனந்தபுரம் அரசு தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுனில்குமார் நண்பர்கள் வீட்டில் இருந்தும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
சுனில்குமாரும், மார்ட்டினும் சேர்ந்து ஏதாவது ஒரு நடிகையை கடத்தி, பணம் பறிக்க வேண்டும் என ஒரு மாதமாக திட்டம் தீட்டியுள்ளனர். அதில் பாவனா சிக்கிக்கொண்டார். மற்ற 4 பேரும் குற்ற சம்பவத்தின்போது சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். இவ்வழக்கில் அரசியல், திரையுலக மோதல்கள் காரணம் இல்லை. முழுக்க, முழுக்க அவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் நடந்ததுதான்” என்றனர்.
இந்நிலையில் கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபரு மான நவீனும், பாவனாவும் காதலித்து வந்தனர். இருவருக்கும் திருச்சூரில் உள்ள பாவனாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர் கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நிச்சய தார்த்தம் நேற்று நடந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என நெருங்கிய உறவினர்களிடம் பாவனா கூறியுள்ளார்.