ஒல்லி நடிகரைபோல் ஆசைப்பட்டுதான் இதற்கு மறுக்கிறாரா மேனக நடிகை?
![ஒல்லி நடிகரைபோல் ஆசைப்பட்டுதான் இதற்கு மறுக்கிறாரா மேனக நடிகை?](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/03/dhanush-1.jpg)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் மேனக நடிகை. நடிப்பது தவிர பாடல்களும் பாடி வருகிறார். கவர்ச்சியில் நம்பிக்கை இல்லாத அவர் நடிப்புக்கு பெயர் போனவர். இந்நிலையில் அண்மை காலமாக அவரை பற்றி ஒரு செய்தி உலா வருகிறது.
தற்போது வெற்றி 61 படத்தில் அப்பா தளபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேனக நடிகை கையில் புதுப்படங்கள் இல்லை என்றும், தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமாக பேசப்படுவது சம்பளம் ஓவர், தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் வேண்டும் என்று அடம் பிடிப்பதால் படம் இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.
உண்மை காரணம் என்னவென்று பார்த்தால் மேனக நடிகைக்கு இயக்குனர் ஆகும் ஆசை வந்துள்ளதாம். அதனால் தான் புது படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். இரண்டு கதை வைத்துள்ளாராம். அதில் ஒரு கதை படம் பண்ணும் அளவுக்கு தயாராகிவிட்டாராம். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.