கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற புனே: சொந்த மண்ணில் மும்பை பரிதாபம்
நேற்று முன் தினம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் புனே அணி மும்பை அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
டாஸ் வென்ற புனே அணி முதலில் மும்பையை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி, 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றடு. ஒரே ஒரு பந்து மட்டுமே மீதமிருக்கையில் புனே அணி த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் புனே கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 84 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்