Breaking News
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறையினர் இன்று மீண்டும் விசாரணை: சோதனையில் சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்து விளக்கம் பெற திட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததை அடுத்து மீண்டும் இன்று நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லம்பாக்கம் ராஜேந்திரன், சம்த்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதன் அடிப்படையில் கடந்த 10ம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணைக்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சரத்குமார், சிட்லம்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் கீதாலட்சுமி மட்டும் ஆஜராகாமல், தான் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தொடர்ந்த உயர்நீதிமன்றதம், கீதாலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 12ம் தேதி கீதாலட்சுமி வருமானவரித்துறையினர் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் பல மணி நேரம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். தாங்கள் விசாரணை நடத்தியதில் வருமானவரித்துறையினருக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் கூறிய பதில்கள் முரண்பட்டதாக இருப்பதால், தொடர்ந்து வருமானவரித்துறையினர் ஆவணங்கள் அடிப்படையில் உண்மையை அறியும் பட்சத்தில் தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்றைய தினம், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமி ஆகியோர் மீண்டும் வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அவர்கள் இருவரும் இன்று காலை ஆஜராக இருக்கிறார்கள். அவர்களிடம் பணப்பட்டுவாடா, வருமானவரித்துறையினருக்கு கிடைத்த ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்துவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறையில் பணியாளர் நியமணம் முதற்கொண்டு மருந்துகள் வாங்குவது உள்ளிட்டவைகளில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினருக்கு கிடைத்த தகவல் தொடர்பாகவும் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.