Breaking News
ஆந்திரா, தெலங்கானாவில் வாகனப்பதிவு செய்ய முடியாததால் முடங்கிய பிஎஸ்-3 ரக வாகனங்கள்

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, பிஎஸ்-3 ரக இரு சக்கர வாகனங்களை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் விற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த மார்ச் 30, 31 தேதிகளில் இத் தகைய வாகனங்களுக்கு தலா ரூ.22,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இவற்றை வாங்க பொதுமக்கள் போட்டி போட்டனர்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் பிஎஸ்-3 ரக வாகனங்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. ஆனால் அன்று சர்வர் சரிவர இயங்காத தால் தற்காலிக வாகன பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் இன்ஷூரன்ஸ், இன்வாய்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால் மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி இந்த வாகனங்களுக்கு வாகனப் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால் தெலங்கானாவில் சுமார் 7 ஆயிரம் வாகனங்களும், ஆந்திராவில் 3 ஆயிரம் வாகனங் களும் இதுவரை வாகனப்பதிவு செய்யப்படாமல் உள்ளன. இத னால் இந்த வாகனங்களை சாலையில் ஓட்ட முடியாமல் உரிமையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தெலங்கானா மாநில போக்குவரத்து துணை ஆணையர் வெங்கடேஸ்வரலு கூறும்போது, “தடை செய்யப் பட்ட பிஎஸ் -3 ரக வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்தால் அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். இதனால் நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாவோம். ஆகையால் இதற்கு நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் கொடுத்தால் மட்டுமே வாகனப் பதிவு செய்ய முடியும்” என்றார்.

இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் முண்டியடித்துக் கொண்டு, குறைந்த விலைக்கு கிடைக் கிறதே என்ற ஆசையில் பிஎஸ்-3 ரக வாகனங்களை வாங்கியவர்கள் செய்வதறி யாது திகைத்து நிற்கின்றனர்.

ஹைதராபாத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ள, ராமசந்திரா ராவின் பிஎஸ்-3 ரக வாகனம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.