Breaking News
இரு ஹீரோக்கள் இணைந்து நடிப்பது சக்ஸஸ் பார்முலா : ஆர்யா

நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் கடம்பன் படம் தொடர்பான‌ அறிமுக நிகழ்ச்சிகள் துபாயில் எப்டிபி விளம்பர நிறுவனம் மற்றும் எஸ்.ஈவெண்ட்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க‌ துபாய் வருகை தந்த நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் ராகவாவிற்கு எப்டிபி விளம்பர நிறுவனத்தின் நட்ராஜ் மற்றும் எஸ்.ஈவெண்ட்ஸ் ஆனந்த் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் கறி எக்ஸ்பிரஸ் உணவகத்தில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் டிக்கெட் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மிகவும் எதிர்பார்போடு நடித்து வெளியாகி ஏமாற்றமளித்த படம்?

நடிக்கும் எல்லா படமும் நன்றாக வர‌ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் வருவது இயல்பு ஆனால் அப்படி நடைபெறாத போது எல்லோருக்கும் ஏமாற்றம் தான் அதில் இரண்டாம் உலகம் படக்குழுவினர் அனைவரும் மிக சிறந்த முறையில் உழைப்பை செலுத்தி பெரும் எதிர்ப்பார்புடன் இருந்தோம் ஆனால் பெரிய அளவில் ரீச் ஆகாதது ஏமாற்றம் தான்.

எந்த மாதிரியான கேரக்டர்கள் நடிக்க விரும்புகிறீர்கள் ?

இப்படி கேரக்டர்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை டைரக்டர் தரும் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது

ரொமாண்டிக் ஹீரோ இமேஜை மாற்றும் எண்ணமுள்ளதா ?

ரொமாண்டிக் ஹீரோவாக திகழ்வது எனக்கு மகிழ்ச்சிதான். நல்லவிசயம் தானே அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பற்றி ?

இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பது சக்ஸஸ் பார்முலாதான். ஹாலிவுட், பாலிவுட் என அனைத்தில் இந்த பார்முலா வெற்றியடைந்துள்ளது எனவே இது தொடர வேண்டும்

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தீர்களா

விசால் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தேன். ஏனென்றால் அந்த அணியினர் கடுமையாக‌ உழைத்தார்கள் சினிமாத்துறையில் மிக முக்கியானது தயாரிப்பாளர் சங்கம். இதன் மூலம் சினிமாவுக்கு நல பணிகளை மேற்கொள்ள முடியும். நிச்சயம் இதனை தலைவராக அனைவரின் ஒத்துழைப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது

எதிர்காலத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கை பற்றிய கதைகளில் நடிக்கும் ஆர்வமுண்டா?

இயக்குநர்கள் இது தொடர்பான திரைக்கதைகளை இயக்கி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

கடம்பன் திரைப்படத்தில் நடித்தது பற்றி ?

கடம்பன் சமூக அக்கறையோடு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/2 ஆண்டுகாலம் இப்படத்திற்காக உழைத்துள்ளோம். இப்படத்தின் கதாபாத்திரத்தில் ஒன்றிய காரணத்தினால் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஒரு காட்சியில் 50 யானைகளோடு இப்படத்தில் நடித்துள்ளேன். படம் மிக சிறப்பாக வந்துள்ளது என்றார். இமாமி பேர் அன்ட் ஹேன்ட்சம், கறி எக்ஸ்பிரஸ் உணவகம், காலிகட் பேரகன் ரெஸ்டாரன்ட் அல் கரமா, டாக்டர் குமார் அஸ்ட்ராலஜர், டேலன்ட் சோன் ஆர்ட் அன்ட் மீயுசிக் இன்ஸ்டிடியூட், அல் நஜ்மா அல் பரிதா இண்டெர்நேசனல் குரூப், கெவின் கேர் உள்ளிட்டோர் ஸ்பான்சர் ஆதரவை இணைந்து வழங்கியிருந்தனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.