Breaking News
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம்: விசாரணை நடத்த உத்தரவு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து, கடும் விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் சிலர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட புகைப்படங் கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரி யத்தையும், கேரள அரசையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த புகைப் படங்களின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வருமாறு தேவஸ்வம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சுரேந்திரன் கூறும்போது, ‘‘கொல்லம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சபரி மலையில் விசேஷ தரிசனம் செய் வதற்கான அனுமதி அளிக்கப் பட்டது. அதைப் பயன்படுத்தி குறிப் பிட்ட வயதுவரை தடை செய்யப் பட்ட பெண்கள் சிலரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர் தரிசனம் செய்திருப்பதாக புகார்கள் வந் துள்ளன. விஐபி தரிசனம் என்ற பெயரில் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை தவறாக பயன் படுத்துவது சட்டவிரோதமானது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.